சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி ஜோதி (70) இன்று காலை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது அதே தெருவில் கூட்டமக இருந்த மாடுகள் ஒன்றை ஒன்று இடித்தவாறு ஓடினயபோது
மூதாட்டி ஜோதியின் மீது மூதாட்டி மீது மோதிசென்றது. இதனால் மூதாட்டி அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காளை மாடுகளை விரட்டி விட்டு பலத்த காயமடைந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே போல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தெருவில் நடந்த மற்றொரு முதாட்டியை இதே கருப்பு நிற காளை மாடு முட்டியதில் மூதாட்டி ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பலமுறை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தகவல் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததே மீண்டும் மாடு முட்டி மூதாட்டி காயமடைந்ததாக அப்பகுதி வாசிகள் புகார் தெரிவித்தனர்.