சட்டமன்றப் பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மாண்பமை உச்சநீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை ஒருமனதாக வலியுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் முழுமையானதாக இல்லை எனக் கூறி தமிழ்நாடு சட்டப்பேரவையிலிருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.