குழந்தைகளை தினமும் காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். எழுந்தவுடன் படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்து, மடித்து வைக்கவும், இரவு தூங்கும்போது விரிப்புகளை தாங்களே போடவும் பழக்க வேண்டும். காலைக் கடன்களை செய்வது, பல்துலக்குவது, காலையில் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது, உணவை சிந்தாமல் சாப்பிட கற்றுத்தரவும்.