சென்னை அடுத்த பம்மலில் உள்ள தனியார் பள்ளி புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு வருகை தந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது:-

விளையாட்டு போட்டிகளில் அதிகளவில் இந்தியர் வெற்றி பெருவதற்கு பிரதமரின் ஊக்கமே காரணம் என்றும், குறிப்பாக கிராம புற இளஞர்களை விளையாட்டு துறையில் வெற்றி பெற வைக்க கூடுதல் கவனம் எடுக்கபடுவதாகவும் தெரிவித்த அவர், மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் அவர்களே பின் வாங்கிய நிலையில் நாம் அதை பற்றி பேசாமல் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் 107 பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களை கொண்டாடுவோம் என்றார்.

மேலும் சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது நேரலை துண்டிக்கபட்டது குறித்தோ , சட்டமன்ற விவாதம் குறித்தோ தான் பேசகூடாது என்றும் ஆனால் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்ட ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் முயற்சி செய்ய வேண்டும் என்ற அவர், கர்நாடக அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் என கூறுபவர்கள்தான் மாநில அரசை மத்திய அரசு நிர்பந்திக்க முடியாது எங்களுக்கு சுயாட்சி உள்ளது என்கின்றனர் என கூறிய அவர் எத்தனை முறை கர்நாடக அரசை மாநில அரசு வலியுறுத்தியது என கேள்வி எழுப்பியதோடு காவிரி விவகாரத்தில் நீண்ட காலதுக்கான ஒரு தீர்வு பெற வேண்டும் என்றார்.

மேலும் பிரதமராகும் தகுதி எங்களுக்கு இல்லையென்றும், உலகம் போற்றும் சிறந்த பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம் அதனால் சீமானின் விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றார்.