இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இரு மாபெரும் நடிகர்களாக இருக்கப் போகிறவர்கள் கவுண்டமணி செந்தில் ஆகிய இருவரும் என்றால் அது சற்றும் மிகை அல்ல என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவர்களுடைய நகைச்சுவை இன்றளவும் பலரை சிரிக்க வைத்து வருகிறது.
தமிழ் சினிமாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருபவர் தான் செந்தில். தற்பொழுது 72 வயதாகி உள்ள செந்தில் அவ்வப்போது சில திரைப்படங்களில் நடிப்பதோடு தனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார் என்றே கூறலாம்.
செந்தில் ஒரு மிகப்பெரிய பிரபலமாக இருந்தாலும், அவருடைய குடும்பத்தை பற்றி மிக மிக குறைவான அளவில் தான் வெளியில் தெரிந்துள்ளது. அவருடைய மூத்த மகன் மணிகண்டன் பிரபு, அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் செய்து வரும் ஒரு உன்னதமான விஷயம் வெளிபட்டுள்ளது.
ஆம் நடிகர் செந்திலின் மூத்த மகன் மணிகண்டன் பிரபுவும் அவருடைய துணைவியார் ஜனனி அவர்களும் பல் மருத்துவர்கள் ஆக பணியாற்றி வருகின்றனர். தனது தந்தையின் பெயரில் ஒரு பல் மருத்துவமனையை நடத்தி வரும் மணிகண்டன் பிரபு மற்றும் அவருடைய மனைவி ஜனனி ஆகிய இருவரும் ஏழைகளுக்கு இலவசமாக பல் மருத்துவம் குறித்த ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றனர்.
மணிகண்டன் பிரபு ஆரம்ப காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்ததாகவும், ஆனால் அதன் பிறகு அவருக்கு படிப்பு மேல் இருந்த ஆர்வம் அவரை படிக்கத் தூண்டி, தற்பொழுது ஒரு பல் மருத்துவராக விளங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். தந்தையை போலவே நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், வாழக்கை அவரை வேறு நல்ல பல காரியங்கள் செய்ய தூண்டியுள்ளது என்று பலரும் அவருக்கு வாழ்த்துகளையோ தெரிவித்து வருகின்றனர்.