சென்னை ஆதம்பாக்கம் கரிகாலன் தெருவில் உள்ள யோகலஷ்மி ஹார்டுவேர்ஸ் கடைக்கு தேவையான பார்சல் லாரியில் வரும் நிலையில் அதிகாலை கடைமுன்பாக வைத்து விட்டு செல்வது வழக்கம் அதனை கடை திறக்கும்போது எடுக்கும் நிலையில் சமிப் நாட்களில் பார்சல் இல்லை என்பதால் அனுப்பிய நபரிடம் விசாரித்துள்ளார். அவர்கள் இறக்கிவிட்டு சென்றதாக கூறியதால் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சியை பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பார்சலை திருடி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்…