முகத்தை அழகுப்படுத்த பெண்கள் விதவிதமான பேசியல் முறைகளை பின்பற்றுவது வழக்கம். அதனுடன் சேர்த்து முகத்திற்கு கூடுதல் அழகு கிடைக்க ஐஸ் கட்டி மசாஜ் செய்யலாம். இதன் மூலம், முகம் பிரகாசமாக, முகச்சுருக்கம் இல்லாமல் இளமையான தோற்றமளிக்கும். வாரத்திற்கு 2 முறை செய்தால், முகத்தில் அதிசய மாற்றத்தை காணலாம். முகமானது பொலிவுடன் மென்மையாக மாறும்.