சென்னைக்கு 100 கிலோ மீட்டர் அளவிலும், மாமல்லபுரத்திற்கு 50 கிலோமீட்டரும், புதுச்சேரி 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலம்பர கோட்டையை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பாபு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆலம்பரக்கோட்டை தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆலம்பரக்கோட்டை சுற்றி உள்ள பகுதிகளை மேம்படுத்த தமிழக தொல்லியல் துறையுடன் இணைந்து திட்ட மதிப்பீடு செய்து இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.