எக்ஸ், யூடியூப், டெலிகிராம் ஆகிய மூன்று நிறுவனங்களும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை தங்கள் தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தவறினால் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு அனுப்பியுள்ள நோட்டீசில், குறிப்பிட்ட மூன்ற சமூக வலைதளங்களும், தங்களது இந்தியப் பிரிவில் பதிவேற்றம் செய்யப்படும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.