அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் தமிழகமெங்கும் இருந்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏவுமான வழக்கறிஞர் இன்பதுரை இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.