செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட மூன்றாவது மண்டலத்தில் உள்ள சிட்லபாக்கம் 43-வது வார்டுக்கு உட்பட்ட துரைசாமி நகரில் உள்ள சாகச நாயகி செல்வி.கார்த்திகா ஜெகதீஸ்வரன் ஆசியா கோப்பை ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு அதிலும் சிட்லபாக்கத்திற்கு பெருமை சேர்த்த சாகச நாயகிக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர் ராஜா அவர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், மாமன்ற உறுப்பினர் சி. ஜெகன் கழக நிர்வாகிகள் சிட்லபாக்கம் பிரதாப் இரா.விஜயகுமார், பரிமளா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.