குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் லியோ திரைப்படத்தில் டிரைலர் வெளியிடப்பட்டது. அதனை காண ஏராளமான விஜய் ரசிகர்கள் வருகை தந்தனர்.
டிரைலரை வெளியிடுவதற்கு முன்பு திரைப்படத்தின் பாடல்கள் ஒளிபரப்பட்டது. அதனை கேட்ட ரசிகர்கள் நடனமாடி, உற்சாகமடைந்தனர்.
முன்னதாக திரையரங்கு வாயிலில் மேளம் அடித்து, பட்டாசு வெடித்து, கொண்டாடினர்.
வைக்கப்பட்ட பேனரில் 2026 ல் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை தளபதி அவர்களின் லியோ திரைப்படம் இந்திய அளவில் வரலாறு சாதனை படைபடைக்க வாழ்த்துகிறோம் என 40 அடி உயர் பேனர் வைத்தனர். இது தேர்தலை குறிக்கும் வகையில் உள்ளது.
திரையரங்கில் டிரைலரை திரையிட்டதும் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அரங்கு அதிரும் வகையில் ஒலி எழுப்பினர்.
அபோது விஜய் மக்கள் அதுபோல் பொதுசெயலாளர் புஸ்லி ஆனந்த் லியோ டிரைலரை ரசிகர்களுடன் பார்த்தார், பின்னர் பேட்டியளித்தார்.