ஐசிசி 50 ஓவர் 13 வது உலகக்கோப்பை
கிரிக்கெட் தொடர்
இந்தியாவில் இன்று தொடங்குகிறது.

தொடக்க நாளான இன்று இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில்
உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகின்றன.

உலககோப்பை தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா, நேரடியாக பங்கேற்கிறது.

ஐ.சி.சி., உலக கோப்பை சூப்பர் லீக் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த 13 அணிகள் இடையிலான, 83 போட்டிகள் (இருதரப்பு மோதல்) முடிவில் ‘டாப்-7′ அணிகள் உலக தொடருக்கு முன்னேறின.

இதன்படி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் என 7 அணிகள் தகுதி பெற்றன.

மீதமிருந்த 5 அணிகள் உலக கோப்பை தகுதிச்சுற்றில் மோதின. முடிவில் இலங்கை, நெதர்லாந்து முன்னேற, மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை அரங்கில் முதல் இருமுறை (1975, 1979) சாம்பியன் ஆனது வெஸ்ட் இண்டீஸ். தகுதிச்சுற்றில் ஏமாற்றிய இந்த அணி, 48 ஆண்டுகளில் முதன் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறாமல் வெளியேறியது.

The Seithikathir WhatsApp Channel
Link: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29