முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம், தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல், குரோம்பேட்டையில் உள்ள எம்.பி.யின் உறவினர் வீடு, வேளச்சேரியில் அவருக்கு சொந்தமாக உள்ள மருத்துவமனை உள்ளிட்ட 70 மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பூந்தமல்லியில் உள்ள கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.