
சென்னை, தலைமைச் செயலகம், வேளாண்மை துறை கூட்டரங்கில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்ட குழுக்களில் “எழுத்தாளர் –- கலைஞர்” என்ற குழுவின் கூட்டம், இக்குழுவின் தலைவரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணைத் தலைவர்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், உறுப்பினர் செயலரும், சமூகநலத்துறை ஆணையர் வே.அமுதவல்லி, உறுப்பினர்கள் ஆர்.பூரணலிங்கம், (ஒய்வு), ஆர்.பாலகிருஷ்ணன், இ (ஓய்வி, திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வன், திரு. கலாப்பிரியா. எஸ்.ராமகிருஷ்ணன், திருமாவேலன், இமையம், அறிவுமதி, வி.எம்.எஸ்.சுபகுணராஜன், கவிஞர் சல்மா, தமிழ்மகன், பொதியவெற்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.