பாஜகவுடன் கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2 கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு இனங்க கூட்டணி முறிவு. 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறினார்.