தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களின்‌ பல்வேறு கோரிக்கை மனுக்கள்‌ மீது மேற்கொள்ளப்பட்டு வரும்‌ நடவடிக்கைகள்‌ தொடர்பான ஆய்வு கூட்டம்‌ மாநகராட்சி மைய அலுவலகத்தில்‌ ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா தலைமையில்‌ நடைபெற்றது. இக்‌ கூட்டத்தில்‌ துணை ஆணையர்‌ செந்தில்முருகன்‌, நகர்நல அலுவலர்‌ டாக்டர்‌ அருள்‌ஆனந்த்‌, உதவி ஆணையர்‌ பி.மாரிசெல்வி, நகரமைப்பு அலுவலர்‌, உதவி செயற்பொறியாளர்‌, மண்டல மேலாளர்கள்,‌ துப்புரவு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.