முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பான முறையில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களை சிறப்பிக்கும் வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. சஜீவனா, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். உடன் பெருமக்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோர் உள்ளனர்.