தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சிட்லபாக்கம் 43வது வார்டு ராகவேந்திரா சாலையில் தார் சாலை புனரமைப்பு பணியை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு சாலை பணியினை துவக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். மேலும் ஒப்பந்ததாரர்களை மழை காலத்திற்கு முன்பாக சாலை பணிகளை தரமாகவும் மாநகராட்சி வழிகாட்டுதலின் படி சரியான அளவீடுடனும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் முன்னிலை வசித்தனர். தாம்பரம் மாநகராட்சி துணை ஆணையர் செந்தில் முருகன், உதவ செயல்பொறியாலர் திரு.பிராபாகரன், இளநிலை பொறியாலர் பழனி ஆகியோர் பொறியாலர் பறிவு பணியாலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் சி.சுரேஷ், பரிமளா, இ.மனோகரன் முன்னாள் உறுப்பினர் பா.பிரதாப், அனந்த லட்சுமி இரா.விஜயகுமார், இ.வி.சுரேஷ், ராமகிருஷ்ணாபுரம் சிவா, சிவகுமார், வெங்கட்ராமன், யோகநாதன், ச.ராஜா, தி.ரமேஷ், தங்ககோபால் மற்றும் கழக நிர்வாகிகள் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.