
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற “ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள்” சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழாவில், இந்திய விண்வெளி துறையில் சாதனை படைத்த விஞ்ஞானிகள் – இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, திருவனந்தபுரம் – திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநர் வி.நாராயணன், ஸ்ரீஹரிகோட்டா – சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஏ.இராஜராஜன், பெங்களுரு – யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையத்தின் இயக்குநர் எம்.சங்கரன், மகேந்திரகிரி – உந்துவிசை வளாக இயக்குநர் ஜெ.ஆசிர் பாக்கியராஜ், சந்திராயன் – 2 திட்ட இயக்குநர் மு.வனிதா, ஆதித்யா (1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி, சந்திராயன் – 3 திட்ட இயக்குநர் ப. வீரமுத்துவேல் ஆகியோரை பாராட்டி, சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்.