தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் பல்வேறு ரயில் சேவைகளின் நேரம் இன்று (அக்.01) முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை காரணமாக பல்வேறு ரயில் சேவைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
34 விரைவு ரயில் சேவைகளின் பயண நேரம், கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே ரயில் சேவைகள் மாற்றம் குறித்து https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.