சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசைவரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர் உள்ளது.
மகாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீபாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாள்களில் தர்ப்பணம் செய்வார்கள்.
இந்நாளில் நாம் பொதுவாக என்ன செய்ய வேண்டும் எவ்வாறு வழிப்பட வேண்டும் என்று பலருக்கு குழப்பம் இருக்கும். அதை தீர்க்கும் வகையில் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
2023 மகாளய பட்சம்
முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் இந்த சோபகிருது வருட 30-09-2023 சனிக்கிழமை முதல் ஆரம்பம் ஆகிறது.
அதிலிருந்து பதினைந்து நாள்களுக்கு மகாளய பட்சம் காலமாகும்.
புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். இந்த பதினைந்து நாட்களும் பித்ரு காரியங்கள் நடைபெறுவதால் எந்த சுப காரியங்களும் நடைபெறுவதில்லை.
இது செய்வதன் முக்கியத்துவம்
மகாளய விருந்தில், முன்னோர்கள் அவர்களிடம் திரும்பி வருவதாக நம்பப்படுகிறது.
ஆகவே அவர்களை மகிழ்விக்க தர்ப்பணம் செய்து வருகின்றார்கள். அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளைச் செய்து பசுக்கள், நாய்கள், காகங்களுக்கு படைக்கின்றார்கள் எனலாம்.
இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்துக் கொள்வதாக நம்பப்படுகின்றது. தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி, தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர், நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம்.
எந்த திதியில் தர்ப்பணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்
· பிரதமை – பணம் சேரும்
· துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்
· திரிதியை – நினைத்தது நிறைவேறும்
· சதுர்த்தி – பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
· பஞ்சமி – சொத்து சேரும்
· சஷ்டி – புகழ் வந்து சேரும்
· சப்தமி – பதவி பெறலாம்
· அஷ்டமி – சமயோசித புத்தி பெறலாம்
· நவமி – பெண் குழந்தைகள் பிறக்கும், திருமண தடை நீங்கும்
· தசமி – நீண்ட நாள் ஆசை நிறைவேறும்
· ஏகாதசி – கல்வி, கலை வளர்ச்சி, விளையாட்டில் திறன் சிறக்கும்
· துவாதசி – நகைகள், ஆடைகள் சேரும்
· திரயோதசி – விவசாயம் செழிக்கும், பசுக்கள் விருத்தியாகும், ஆயுள், அரோக்கியம் கூடும்
· சதுர்த்தசி – பாவம் நீங்கி, தலைமுறைகளுக்கு நன்மை சேரும்
· மகாளய அமாவாசை – முன் சொன்ன அத்தனை பலன்களும் கிடைக்கும்
வீட்டிற்கு வாங்கக்கூடிய பொருட்கள்
· கருப்பு எள்
· பார்லி
· புது வஸ்திரம்
· அரிசி
· எண்ணெய்
· வெள்ளைப் பூக்கள்
மகாளய பட்சம் நாட்களில் கடைப்பிடிக்க வேண்டியவை
- தினமும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.
- தாம்பத்யம் வைத்துக் கொள்ளக் கூடாது.
- சைவ உணவை மட்டும் சாப்பிட வேண்டும்.
- உணவில் பூண்டு, வெங்காயம், சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
- இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
- நம் முன்னோர்களை வழிபட்ட பின்னரே, பூஜைகளை செய்ய வேண்டும்.
- தர்ப்பணம் செய்பவர்கள், தினமும் தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டில் பூஜை செய்ய விளக்கேற்றி வழிபட்டு அன்றாட பணிகளை தொடங்க வேண்டும்.