விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 இன்று (அக்.01) தொடங்குகிறது.
இந்த போட்டியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் கூல் சுரேஷ், அனன்யா ராவ், ஐஷு, நடிகர் விஷ்ணு, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் சரவணன், நடிகர் பப்லு பிரித்விராஜ், லவ் டுடே நடிகை அக்ஷயா உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.எழுத்தாளர் பவா செல்லதுரையும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.