தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, வார இறுதி மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் சுற்றுலா தளங்களில் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் இரவு நேரத்தில் கூட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.