பீகார் மாநிலம் பாட்னாவில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்துள்ளார்.
அந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவியை தைரியமாக காப்பாற்றியுள்ளார்.
இதன் காரணமாக சிறிய அளவிலான காயத்துடன் மாணவி மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவி மாடியில் இருந்து குதிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.