தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டுக்கு உட்பட்ட ராகவேந்திரா சாலை சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது. இந்த பள்ளங்களை ஏற்கனவே வெட்மிக்ஸ் எனப்படும் கலவை கொண்டு நிரப்பியும் மேலும் அந்த வெட்மிக்ஸ் நகர்ந்ததால் மேலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களை சீரமைப்பதற்கு பேட்ச் ஒர்க் எனப்படும் முறையில் தார் சாலை மேலும் அமைப்பதற்கு எழுதிக் கொடுத்த நிலையில் தற்காலிகமாக மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சொந்த முயற்சியால் பள்ளங்கள் மூடப்பட்டது.