தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌, முன்னாள்‌ மேயர்‌ சிவராஜ்‌ 132-வது பிறந்த நாளை முன்னிட்டு (29.09.2023) சென்னை தங்கசாலை, மணிக்கூண்டு அருகில்‌ அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ மு.பெ.சாமிநாதன்‌‌, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையங்கள்‌ துறை அமைச்சர்‌ பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்‌ ஆர்‌.பிரியா, துணை மேயர்‌ மகேஷ்குமார்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறை இயக்குநர்‌ த.மோகன்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ மலர்‌ தூவி மரியாதைச்‌ செலுத்தினார்கள்‌.