
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாப்பன் கால்வாயில் பொதுப்பணித் துறையின் மூலம் 2.45 கீ.மி நீளத்திற்கு தூர்வாரப்பட்ட பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா,உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்குமார் சிங், பொதுப்பணித் துறை அலுவலர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உதவி /இளநிலை பொறியாளர், தாம்பரம் வட்டாட்சியர், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.