பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள மசூதி அருகே இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 34 பேர் உயிரிழந்தனர் மற்றும் 130 பேர் காயமடைந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈத்-இ-மிலாத்-உன்-நபி பெருநாள் ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த இடத்தில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.