மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, தலைமையில்‌ தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட பம்மல்‌ மண்டலம்‌ வார்டு-7, அண்ணா நகர்‌ பகுதியில்‌ நடைபெற்று வரும்‌ பாதாள சாக்கடை பணிகளை மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. இந்த ஆய்வின்‌ போது துணை மேயர்‌ கோ.காமராஜ்‌‌, மண்டல குழுத்தலைவர்‌ வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள்‌, தலைமை பொறியாளர்‌, செயற்பொறியாளர்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி/இளநிலை பொறியாளர்கள்‌ உட்பட பலர்‌ உடனிருந்தனர்‌.