ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் பாய்மரப் படகு போட்டியில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆண்கள் பாய்மரப் படகு போட்டியில் பங்கேற்ற இந்திய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான விஷ்ணு சரவணன் 34 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பாய்மரப் படகு போட்டியில் மட்டும் இந்திய அணி இதுவரை 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

இன்று காலைமுதல் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.

இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டு புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.