ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால் அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும்.

அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை எந்த குறையும் இல்லாமல் அரசு ஊழியர்கள் நிறைவேற்ற வேண்டும்.

ஆசிரியர் தேர்வை வெளிப்படையாக நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும்.

அரசுக்கு நல்ல பெயராக இருந்தாலும், கெட்ட பெயராக இருந்தாலும் அது அதிகாரிகளின் செயல்பாட்டை பொறுத்து தான் அமையும்-TNPSC Group-4 பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.