ஜமீன் பல்லாவரம் பாரதி நகரை சேர்ந்தவர் சத்தியவாணி (55) வீட்டு வேலை செய்து வந்தார் இவருடைய கணவர் கண்ணியப்பன் கூலி வேலை செய்து வருகிறார்,
நேற்று இரவு சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் குளிச்சியான சூழல் நிலவியது இதனால் சத்தியவாணி கீழ் வீட்டில் புழுக்கமாக இருப்பதாக கூறிவிட்டு மொட்ட மாடியில் தூங்குவதற்கு சென்றுள்ளார்,
இன்று அதிகாலை அருகே சரவணன் என்பவரின் வீட்டின் சுற்று சுவர் சத்தியவாணி தூங்கி கொண்டிருந்த வீட்டின் சுற்று சுவர் மீது விழுந்தது இதில் சத்தியவானி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,
காலையில் மாடியில் சென்று பார்த்த உறவினர்கள் சத்தியவாணி மீது சுவர் விழுந்து இறந்த நிலையில் இரதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்,
தகவல் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
மேலும் நடத்தபட்ட விசாரனையில் நேற்று இரவு புறநகர் நகர் பகுதியி பெய்த மழையின் காரணமாக சுற்று சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு தெரியவந்துள்ளது.