
குரோம்பேட்டை நடேசன் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன .இந்த பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய்விட்டது. தற்போது அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை மற்றும் பல இடங்களில் உள்ள கழிவுநீரும் சாக்கடை நீரும் கலந்து தெருக்களில் ஓடுகிறது.
தாம்பரத்தில் மழை பெய்த போது கூட மற்ற பகுதிகளில் மழை நீர் உடனடியாக வடிந்துவிட்டது. ஆனால் இந்த பகுதியில் மழை நீர் கால்வாய் காணாமல் போய்விட்டதால் தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இது பற்றிய செய்தி ஏற்கனவே வெளியானது. இதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
ஆனாலும் தொடர் நடவடிக்கை எதுவும் இல்லாததால் மீண்டும் சாக்கடை நீர் சூழ்ந்து நிற்கிறது. அங்கு வசிப்பவர்கள் வெளியே செல்ல முடியாமலும் வெளியே இருந்து மற்றவர்கள் உள்ளே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் .
சாக்கடை கழிவு நீர் கலப்பதால் மலேரியா, டெங்கு ஜூரம் பரவும் அபாயம் ஏற்பட்டது. ஒரு சிலருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் கூறினார்கள்.