ஆவடி ரயில் நிலையத்தில்விரைவு ரயில் மோதி2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி ரயில் நிலையத்தில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் பகுதியில் கேட் இல்லை எனக் கூறப்படுகிறது.பயணிகளே இரு பக்கமும் பார்த்துவிட்டு தண்டவாளத்தைக் கடந்து செல்லும் சூழலே நிலவி வருகிறது. ரயில் வருவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் செய்யப்படுவதில்லை.
இந்நிலையில் (செப். 24) இரவு 9 மணியளவில், பயணிகள் அவ்வாறு தண்டவாளத்தைக் கடக்கும்போது திடீரென இரண்டு தண்டவாளத்திலும் எதிரெதிரே விரைவு ரயில் வந்துள்ளது.
அப்போது 2 தண்டவாளங்களுக்கும் நடுவில் சிக்கியவர்களில் ஒரு பெண் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் படுகாயமடைந்த சிறுவன் தலையில் ரத்தப் போக்குடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
பெண் காவலர்ஒருவர் உடனடியாக சுதாரித்து கீழே படுத்து விட்டதால், லேசான காயங்களுடன் தப்பினார்