2010 ம் ஆண்டு துவங்கிய ராதாநகர் ரெயில்வே சுரங்கபாதை பணிகள் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டப்பட்டது.
2லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடையும் இந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் ரெயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காகவும், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் நெரிசலை குறைக்கும் விதமாக டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்திட வேண்டும் என அதிகாரிகளிடம் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது குரோம்பேட்டை வியாபாரிகள் சங்க தலைவர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.