சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர்
காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் வயது 33 பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். பாரதிய ஜனதா கட்சி பெருங்களத்தூர் முடிச்சூர் மண்டல பட்டியல் அணி தலைவராகவும் பொறுப்பில் இருந்தார்.
நேற்று முன்தினம் தேதி இரவில் இருந்து இவரை காணவில்லை.
இந்நிலையில் நேற்று பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு தலையில் கல்லை போட்டும் தலை முற்றிலுமாக சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதை பார்த்த பொதுமக்கள் பீர்க்கன்காரனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது இரவில் காரில் கடத்தி வந்து மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது கொலை செய்யப்பட்டு கிடந்த பீரி வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் காரில் வந்தவர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் சதானந்தபுரம் அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கொலையாளிகளின் காரை மடக்கி பிடித்து அதில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த குணா (எ) குணசேகரன் (32), முடிச்சூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (22), அருண் (29), தாம்பரம், கடப்பேரி பகுதியை சேர்ந்த சந்துரு (22) என்பதும் 2015 ஆம் ஆண்டு புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ராஜா என்பவரை கொலை செய்து வழக்கில் பீரி வெங்கடேசனும் அவரது நண்பர் குணா (எ) குணசேகரனும் கைது செய்யப்பட்டனர்.
இதன் பிறகு குணா தலைமையில் பெருங்களத்தூர் பகுதியில் ரவுடி கோஷ்டி உருவானது.
இதன் பின்னர் குணாவும், பீரி வெங்கடேசனும் ஒன்றாக ரியல் எஸ்டேட் தொழில் தனித்தனியாக செய்து வந்ததாகவும், இதில் புறம்போக்கு நிலங்களை விற்பனை செய்வதில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இதில் புரோக்கர்களாக செயல்படுபவர்கள் இருவரிடமும் சென்று குணா, பீரி வெங்கடேசனை கொலை செய்யப் போவதாகவும், பீரி வெங்கடேசன் குணாவை கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் பீரி வெங்கடேசன், குணாவையும், குணா, பீரி வெங்கடேசனையும், கொலை செய்து விட வேண்டும் என திட்டம் தீட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினம் அன்று இரவு தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில் பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே குணா மற்றும் பீரி வெங்கடேசன் ஆகியோர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது குணா, பீரி வெங்கடேசன் இடம் மது அருந்து போகலாம் என கூறி அழைத்துள்ளார்.
இதனை அடுத்து குணாவின் காரில் பீரி வெங்கடேசன் ஏரியா போது காரின் பின்னிருக்கையில் சதீஷ்குமார், அருண், சந்துரு ஆகியோர் இருந்துள்ளனர்.
ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் தான் என்பதால் பீரி வெங்கடேசன் எதுவும் பேசிக்கொள்ளாமல் அவர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி நிலத்தில் சென்று ஐந்து பேரும் மது அருந்தி உள்ளனர்.
அப்போதே குணா, பீரி வெங்கடேசன் இடம் தன்னை கொலை செய்து விடுவதாக கூறினாயா என கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரம் அடைந்த குணா மற்றும் அவருடன் இருந்த சதீஷ்குமார், அருண், சந்துரு ஆகியோர் பீரி வெங்கடேசனை தலை மற்றும் உடல்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.