செம்பாக்கம் தெற்கு பகுதி திமுக 41 வட்டம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞத் நூற்றாண்டு மற்றும் திராவிட மாடல் அரசின் விளக்கப்பொது கூட்டம் பகுதி செயலாளர் இரா.சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பகுதி துணை செயலாளர் லட்சுமிபதிராஜா தலைமை வகித்தார்.

திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், தமிழ்நாடு தோல் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் விளக்கி பேசினார்..

மத்தியில் ஆளும் பாஜக சதான பாசிச ஆட்சி நடைபெறுவதாக கூறிய அவர் 9 ஆண்டுகாலமாக விலையேற்றத்தில் இருந்த சமையல் எரிவாயும் விலை தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் விலை குறைக்கப்படுவதாக கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில்
தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆதிமாறன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் தாம்பரம் நாராயணன், மாநகர துணை செயலாளர் சதாசிவம், கவுன்சிலர் கற்பகம் சுரேஷ், தனவந்தன், கல்யாணி, ஷாஜகான் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமான திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.