சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள 6 பெரியளவிலான அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா அதிகாரிகளுடன் தீவிர சோதனை நடத்தினார்.. அப்போது கெட்டுபோன உணவுகள், அழுகிய மற்றும் பழைய இறைச்சிகள், தவறான முறையில் பதபடுத்தபட்ட மற்றும் தடை செய்யபட்ட மசாலாக்கள், செயற்கை உணவு வண்ண பொடிகள் போன்றவறை குப்பையில் கொட்டி அழித்தார்.

பின்னர் சுகாதாரமற்று நடத்தபட்ட 2 உணவகங்களை மூடியும், உரிமம் இன்றி நடத்தபட்ட ஒரு உணவகத்திற்கு விற்பனை செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டதோடு, மற்ற உணவகங்களில் கட்டுபோன பொருட்கள் மற்றும் நெகிழி பயன்பாட்டிற்காக அபராதம் விதித்தார். மேலும் நுன்னுயிர் கிருமி பரிசோதனைக்காக 6 உணவகங்களிலிருந்தும் சிக்கன் தந்தூரி, சவர்மா, கிரில் சிக்கன், பரோட்டா, மையனஸ், உள்ளிட்ட உணவுகள், மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு கொண்டு சென்றார்.

பின்னர் பேட்டியளித்த அவர் : செங்கல்பட்ட மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில்; 130 அசைவ உணவகங்களில் சோதனை நடத்தியிருப்பதாகவும், இந்த உணவகங்களில் எடுக்கபட்ட மாதிரிகளை நுன்னுயிர் கிருமிகள் பரிசோதனைக்கு உட்படுத்தி அதன்பிறகு அந்தந்த உணவகங்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கபடும் என்றார். அதேபோல் பொதுமக்களும் உணவகங்களின் சுகாதாரம், தரம், உரிமம் போன்றவற்றை தெரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் தரமற்ற உணவால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கமுடியும் என்றும் ஆன்லைனில் வாங்கபடும் உணவுகளில் அதிகளவு கெட்டுபோன உணவுகள் வழங்கப்படுவதாக அதிக புகார்கள் வருவதாகவும் தெரிவித்தார்.