அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அம்பலவாணன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான மயிலாப்பூரில் உள்ள அலுவலகம், பையனூரில் உள்ள அவரது தோட்டம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதே போல் ராதா இன்ஜினியரிங் குழுமத்தின் துணை நிறுவனங்களான இயங்கி வரும் தி.நகர் சங்கார தெருவில் உள்ள பண்டாரி என்பவருக்கு சொந்தமான வீடு, வேப்பேரியில் உள்ள வி.எஸ்.எண்டர்பிரைசஸ் நிறுவனம், எழுகிணறு பகுதியில் உள்ள ஆதிநாத் ஸ்டீல் நிறுவனம், கிண்டி ஆலந்தூரில் உள்ள அபி ஜெனிக்ஸ் பயோ சொல்யூஷன்ஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் ஏகாத்தூரில் உள்ள ஹிரணந்தனி பிரிட்ஸ் உட் நிறுவனம், பாரிமுனை மூக்கர் நல்ல முத்து தெருவில் உள்ள தனியார் நிறுவனம், கீழ்ப்பாக்கம் குளக்கரை சாலையில் உள்ள வீடு, ஜாபர்கான் பேட்டையில் உள்ள அலுவலகம், ஒரகடம் பகுதியில் உள்ள இன்டஸ்ட்ரியல் காரிடார் நிறுவனம், இன்டர்லேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் சோதனை நடந்தது.

ராதா இன்ஜினியரிங் குழமம், அதன் துணை நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள், மின்வாரிய முன்னாள் அதிகாரி காசி வீடு என மொத்தம் 40 இடங்களில் சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. இந்த சோதனையில் இருவேறு கணக்குகள் கையாண்டு வந்ததற்கான ஆவணங்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், போலியான பெயரில் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் ஆவணங்கள், வெளிநாடுகளில் இருந்து இயந்திரம் கொள்முதல் செய்ததில் இரண்டு விதமான கணக்குகள் காட்டப்பட்ட ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனை இன்றும் தொடரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவில் தான் எத்தனை கோடி ரூபாய் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வரிஏய்ப்பு இந்த நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுனங்கள் செய்துள்ளனர் என தெரிவரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் ராதா இனிஜினியரிங் குழுமத்திற்கு சொந்தமான இடங்கள் மற்றும் மின்வாரிய முன்னாள் அதிகாரி வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.