தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம், சேலையூர் ஜானகிராமன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆணையாளர் ஆர்.அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மக்களிடையே டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த ஆய்வின்போது, நகர் நல அலுவலர், துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.