சென்னையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஸ்டை செய்து தினமும் வழிபட்டு வருகின்றனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் கடற்கரைக்கு சிலைகளை எடுத்துக் கொண்டு விசர்ஜனம் செய்ய உள்ளனர்.

இந்த இடைப்பட்ட காலங்களில் விநாயகர் சிலை வைத்திருக்கும் விழா குழுவினர் பல்வேறு நல திட்ட உதவிகள், அன்னதானம், சம்பந்தி போன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்து வழங்கப்பட்டு வருகின்றனர்.

இதை சாதகமாக பயன்படுத்தி சிலர் செய்தி எடுக்க வந்துள்ளதாக கூறி விழா குழுவினரிடம் பேரம் பேசி ஒரு தொகையினை பெற்று செல்வதாக புகார்கள் தெரிவிக்கப்படுள்ளது. பணத்தை பெற்றுக் கொண்டு செய்தி வெளியிடுவதும் இல்லை.

அவர்களை தொடர்பு கொண்டால் கைப்பேசி எடுப்பது இல்லை என்ற விழா குழுவினர் புலம்பி வருகின்றனர்.

சில சேனல்கள் செய்தியாளர்கள் வரும் போது யூடியூப் சேனல் செய்தியாளர்கள் வருவதால் விழா குழுவினர் ஏமாந்து போய் விடுகின்றனர்.

பணத்தை வாங்கி கொண்டு செய்தி போடாமல் அவர்கள் இனி மறுபடியும் இந்த ஏரியாவுக்குள் வரட்டும் அப்போது பார்த்துக் கொள்வதாக விழா குழுவினர் புலம்பினர்.

ஒரு சிலரால் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது.