காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகம் செய்ய ஈசர் வேனில் அட்டை பெட்டியில் மதுபெட்டிகள், பீர்பாட்டிகளை அனுப்பியுள்ளனர். வேனை ஓட்டுனர் பாஸ்கர் என்பவர் ஓட்டிய நிலையில் இரண்டு கூலி தொழிலாளர்களும் அமைந்துள்ளனர்.

இந்த நிலையில் வண்டலூரை நோக்கி படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரியில் வேன் வரும்போது நிலைத்தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

ஓட்டுனர் பாஸ்கர் உள்ளிட்ட மூவருக்கும் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மீட்கப்பட்டனர்.

மேலும் தகவல் அறிந்த டாஸ்மாக அதிகாரிகள் மாற்றுவாகனம் கொண்டுவந்த நிலையில் உடையாத மதுபெட்டிகளை ஏற்றி சென்றனர்.

இதில் 10 ஆயிரம் மதிப்புள்ள மது பெட்டிகள் உடைந்ததாக கூறப்படுகிறது.

டாஸ்மாக வேன் கவிழ்ந்த தகவல் சுற்றுவட்டதில் பரபரப்பை ஏற்படுத்தியது.