சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மற்றும் பிஜேபி நிர்வாகியான வெங்கடேசன் என்கிற பெரி வெங்கடேசன் இவர் மீது பீர்கன்காரனை காவல் நிலையத்தில் 2015ம் ஆண்டு கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளார்.

மேலும் தாம்பரம், சேலையூர் போன்ற காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலவியில் உள்ளது.

இந்நிலையில் இன்று காலை குட்வில் நகரில் உள்ள காலி மைதானத்தில் தலை முற்றிலுமாக சிதைக்கபட்ட நிலையில் வெங்கடேசன் சடலமாக இருப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் பீர்கன்காரனை காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை பார்த்த போது தலை முற்றிலுமாக சிதைகப்பட்ட நிலையில் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யபட்ட இடத்தில் போலீசார் ஆய்வு செய்ததில் முன்னதாக வெங்கடேசனை தலையில் வெட்டிய மர்ம நபர்கள் அவரை சிறிது தூரம் இழுத்து சென்று தலையை சிதைத்தது தெரியவந்துள்ளது.
முன்விரோதம் காரணமாக என்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.