வீடு மனை யோகம் தருவதில் முதலிடம் எப்போதுமே முருகனுக்குதான். வெள்ளிக்கிழமைகளில் வேலவனை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. செவ்வாய்க்கிழமைகளில் முருகக்கடவுளை வணங்குவது செவ்வாய் தோஷத்தையெல்லாம் போக்கவல்லது என்கிறார்கள். முருகப்பெருமானின் வேலுக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்து கொண்டால், இதுவரை உள்ள பாவங்களெல்லாம் பறந்தோடும் என்பதும், கவலைகள் அனைத்தும் காணாமல் போகும் என்பதும் ஐதீகம். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் வேலவனை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. வெள்ளிக்கிழமையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி, செந்நிற மலர்கள் சூட்டி, கற்கண்டு நைவேத்தியம் செய்து, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தால் பட்ட துயரெல்லாம் பஞ்சாய் பறந்தோடும். வாழ்வில் இதுவரை இல்லாத, கிடைக்காத, தாமதப்பட்டு வந்த முன்னேற்றமெல்லாம் வரிசையாக கிடைக்கும். வீடு மனை யோகம் தருவதில் முதலிடம் எப்போதுமே முருகனுக்குதான். எனவே, முருகனை மனதார தொடர்ந்து பிரார்த்தனை செய்தால் சொந்த வீட்டில் உங்களை அமரச் செய்து அழகு பார்ப்பார்.