இவ்விரதம் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் 21 இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர்.
முதல் 20 நாட்களும் ஒரு வேளை மட்டும் உணவினை உட்கொள்கின்றனர் விரதமிருப்போர் கடைசிநாள் முழுஉபவாசம் மேற்கொள்கின்றனர். விரதத்தின் நிறைவு நாள்அன்று பலவிதமான உணவுப்பொருட்களை தானமாகக் கொடுப்பர். இவ்விரதத்தின் பலனாக நல்ல வாழ்க்கைத்துணை, நற்புத்திரப்பேறு ஆகியன கிடைக்கும்.