
மாடித் தோட்ட செடிகளை பயிரிட நோய் எதிர்ப்புத் திறன் உள்ள விதைகளை வாங்கி பயிர் செய்வது நல்லது. செடிகளில் புழுக்கள் தென்பட்டால், வேப்பங்கொட்டை சாறு, வேப்ப எண்ணெய், பிண்ணாக்கு சாறு உபயோகிக்கலாம். ரசாயன உரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால், மருந்து தெளித்து 10 நாட்கள் வரை காய்களை பறிக்கக்கூடாது. பூஞ்சை நோய்கள் தென்பட்டால், தகுந்த பூஞ்சை கொல்லி மருந்தை தெளிப்பது அவசியம்.