சிட்லபாக்கம் பகுதி எஸ்.பி.ஐ.காலனி கலைவாணர் சாலை சந்திப்பில் முன்னாள் கவுன்சிலர் பா.பிரதாப் கோரிக்கையின் பேரில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10,00,000 ஒதுக்கி புதிய நியாய விலைகடை அமைக்கப்பட்டது. இதனை டி.ஆர்.பாலு எம்.பி. திறந்து வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ 4வது மண்டல தலைவர் டி.காமராஜ், 3வது மண்டல தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், மாமன்ன உறுப்பினர்கள் செ.சுரேஷ், சி.ஜெகன், எ.மனோகரன், இரா.விஜயகுமார், சி.பரிமளா, ந.சீனிவாசன், இ.வி.சுரேஷ், மு.பாரதிதாசன், ம.சீனிவாசன், மு.வீரப்பன், எம்.ஆர்.ராமசந்திரன், நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.