குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரியம்மன் பக்தஜன சபையின் முன்னாள் தலைவர் தெய்வத்திரு டி.என்.குருநாதன் அவர்களின் திருவுருவப்பட திறப்பு விழா 10/9/2023 ஞாயிறு மாலை 6 மணி அளவில் சபையின் அன்னதான கூடத்தில் நடைபெற்றது. சபையின் மூத்த உறுப்பினர் ஆர்.லட்சுமணன் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். முன்னாள் கவுன்சிலர் கே.ரமேஷ், ஜி.எஸ்.டி ரோடு நியூஸ் ஆசிரியர் கி.முருகானந்த ஆதித்தன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். சபையின் நிர்வாகிகள் ஆர்.வரதகவுண்டர், ஆர்.சத்தியசேகரன், சி.எஸ்.முரளி மனோகரன், கே.தியாகராஜன், எச்.கார்த்திகேயன் பி.பாலச்சந்தர் மற்றும் நகர் நலவாசிகள், சுபஸ்ரீ பாலு, சோபனசந்தர் அன்னாரின் பணிகளை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார்கள். தெய்வத்திரு டி.என்.குருநாதனின் குமாரர் ஜி. சத்யநாராயணன் ஏற்புரை ஆற்றினார். மற்றும் அண்ணாரின் குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பித்தனர். விழாவினை சபை சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.