செய்முறை தேவையானவை: முட்டைகோஸ் இலைகள் – ஒரு கப், கடலைமாவு – ஒரு கப், அரிசிமாவு – கால் கப், மிளகாய்தூள் – சிறிதளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, சமையல் சோடா (தேவையானால்) சிறிதளவு, உப்பு – சுவைக்கேற்ப, எண்ணெய் – பொரிப்பதற்கு. செய்முறை: கோஸ் இலையை நன்றாக சுத்தம் செய்து, நடு நரம்பை எடுத்துவிட்டு, நான்காக (பீடா மடிப்பது போல்) மடித்து, ஒரு கிராம்பை நடுவில் குத்தி விடவும். கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், சமையல் சோடா சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். மடித்த முட்டைகோஸ் பீடாக்களை இதில் தோய்த்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சட்டென்று செய்யக்கூடிய, இன்ஸ்டன்ட் டிபன் இது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.